Vettri

Breaking News

யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக குற்றசெயலில் ஈடுபட்டு வந்த 9 சந்தேகநபர்கள் யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் இன்று 2023.8.18 ஆம் திகதி கைது!!




யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொள்ளுதல், பெற்றோல் குண்டு அடித்தல், பொருட்களுக்கு சேதம் விளைவித்தல், வாகனங்களை தீயிட்டு எரித்தல் போன்ற குற்றச்செயல்களுடன் 9 சந்தேகநபர்கள் யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் இன்று 2023.8.18 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டலில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினர் மேற்படி சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர். மேற்படி சந்தேகநபர்கள் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் முகவர்களுடாக அவர்களிடம் பணம் பெற்று கூலிப்படையாகச் செயற்பட்டு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். அண்மையில் கள்ளியங்காட்டுப் பகுதியில் பெண்களின் ஆடை அணிந்து வீட்டினை நாசப்படுத்தி எரித்தமை தொடர்பிலும் விஸ்வநாதன் என்பவரிடமிருந்து 2 லட்சம் ரூபா பணத்தைப் பெற்று பெற்று மைதானப் பிரச்சினைக்காக வன்முறையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. அத்துடன் கீரிமலைப் பகுதியில் ஒரு லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுத் தாக்குதல் மேற்கொண்டமை, திருநெல்வேலியில் மருத்துவர் வீட்ழல் பெற்றோல் குண்டு அடித்தமைக்கும் ஒரு லட்சம் ரூபா பணம் பெற்றுக்கொண்டமை கோப்பாய் பால்பண்ணை பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீதான தாக்குதல்விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போதைப்பொருளுக்கு அடிமையான இந்தச் சந்தேகநபர்கள் , போதைப்பொருளை பயன்படுத்துவதற்காக பணம் பெறுவதற்காகவே இவ்வாறு செயற்பட்டு வந்தமை வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற வீடுகளில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட பின்னர் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்த வீடியோ க் காட்சிகளும் சந்தேகநபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் சந்தேகநபர்களிடம் 3 மோட்டார் சைக்கிள், 2 வாள்கள், ஒரு கோடாரி ஒரு சுத்தியல் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்..

No comments