Vettri

Breaking News

748 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை அழிக்க நடவடிக்கை!






சட்டவிரோதமான முறையில் துபாயிலிருந்து இலங்கைக்கு கொள்கலனில் கொண்டு வரப்பட்ட 748 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு  சிகரெட்டுகளை அழிப்பதற்கு சுங்க வருமான கண்காணிப்பு திணைக்கள அதிகாரிகள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்தக் கொள்கலன் இவ்வருடக் ஜூன் மாதத்தில் கைப்பற்றப்பட்டது. அதனுள்ள சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 947,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

கொழும்பு துறைமுக சுங்கத்திலிருந்து இந்த சிகரெட் கையிருப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தால், இலங்கைக்கு 695 மில்லியன் ரூபா சுங்க வருமானம் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments