சீன ஆய்வுக் கப்பலான "ஷி யான் 6" ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி!
வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான "ஷி யான் 6" இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
"ஷி யான் 6" என்ற சீன கடல் ஆய்வுக் கப்பல் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த சீன கடல் ஆய்வுக் கப்பல் இலங்கையின் நாரா நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் பயணத்திற்குத் தயாராகி வருவதாகவும், தென்னிந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் பொருளாதார வலயம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி விரிவான ஆய்வை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த கப்பல் கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments