Vettri

Breaking News

சிங்கராஜ வனப்பகுதியில் தாவர, விலங்குகளின் பாகங்களை சேகரித்த 3 ஈரானியர்களுக்கு அபராதம்.




 


சிங்கராஜ  வனப்பகுதியில் தாவர, விலங்குfளின் பாகங்களை சேகரித்த மூன்று ஈரானியர்களுக்கு உடுகம நீதிவான் நீதிமன்றம் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் தலா 44 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.

ஈரானிய பிரஜைகள் மூவரும் அண்மையில் சிங்கராஜ வனப்பகுதியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாகங்களை சேகரித்துக்கொண்டிருந்த போது நெலுவ லங்காகம பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வன பாதுகாப்பு திணைக்களத்தின் நெலுவ பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

No comments