Vettri

Breaking News

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு!!




மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி கட்டுப்பாடு 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு | Import Restrictions Be Further Relaxed September அண்மைய பொருளாதார நெருக்கடியுடன் சில பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். இதற்கிடையில், கடந்த ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி, 1,465 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதன் பிறகு டிசம்பர், பெப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் பொருட்களின் ஒரு பகுதி மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இதேவேளை, இந்த வருடத்தில் நாட்டிற்கு 45.4 மில்லியன் டொலர் வெளிநாட்டு பணம் கிடைத்துள்ளதாவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

No comments