இராணுவ கெப் வாகனத்தை தாக்கிய 3 இளைஞர்கள் அக்கராயன்குளம் பொலிஸாரால் கைது!
ஆனைவிழுந்தான் குளம் பகுதியில் இராணுவ கெப் வாகனத்தை தாக்கியதாகக் கூறப்படும் மூன்று இளைஞர்களை அக்கராயன்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
படையினர் பயணித்த கெப் மீது மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் சென்றே சந்தேக நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஆனைவிழுந்தான் குளம் இராணுவ முகாமின் கட்டளைத் தளபதி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments