எட்டு மாடிக் கட்டடத்தில் இருந்து விழுந்த 24 வயது இளைஞன் உயிரிழப்பு!
வெள்ளவத்தை பிரட்ரிக்கா வீதியில் காணப்படுகின்ற 8 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த 24 வயதுடைய இளைஞர் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று (11) காலை 8 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெள்ளவத்தை பிரட்ரிக்கா வீதியில் வசிக்கும் 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments