செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்...
யாழ்ப்பாணம்
செஞ்சோலையில் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 63 பாடசாலை மாணவிகளின் 17வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது எம்.கே. சிவாஜிலிங்கத்தால் உயிரிழந்த மாணவிகளுக்கு சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
செஞ்சோலை
அதேவேளை, முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கை வான்படையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.
வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது,
சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் குறித்த பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த பகுதியில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்
செஞ்சோலைக் குண்டுத் தாக்குதல் 2006 ஓகஸ்ட் 14 அன்று இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்டது.
இதன் போது 16 முதல் 18 அகவை வரையான 53 பாடசாலை மாணவர்களும் 4 பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.
No comments