Vettri

Breaking News

அதிகரிக்கும் தொழு நோய் – 14 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் பதிவு.




 




இந்த வருடத்தில் மொரட்டுவ பிரதேசத்தில் அதிகளவான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.


அந்த பணியகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் பிரதம வைத்திய அதிகாரி சனத் தீபக்க இதனை தெரிவித்துள்ளார்.


கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 127 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் மொரட்டுவை பிரதேச செயலகப் பிரிவில் வருடாந்தம் சுமார் 120 தொழுநோய்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் மொரட்டுவையில் 51 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 14 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் உள்ளதாகவும் மஞ்சுளா திலகரத்ன தெரிவித்தார்.

No comments