Vettri

Breaking News

தாகம் தீர்க்க வந்த விலங்குகளை வேட்டையாடிய 13 பேர் கைது!!




 வறட்சி காரணமாக வில்பத்துவ வன பூங்கா மற்றும் தப்போவ சரணாலயத்தின் ஊடாக பாயும் கலா ஓயாவிற்கு நீர் தேடி வரும் விலங்குகளை  வேட்டையாடியமைக்கான குற்றச்சாட்டில் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை வனத்தவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ வனவிலங்கு அதிகாரிகளின் மூலமாகவே இடம்பெற்றுள்ளது.

பல நாட்களாக விலங்குகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களிடமிருந்து  கைத்துப்பாக்கிகள், 12 போர் துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் மின்விளக்குகள், வெடிமருந்து உறைகள், வெடிமருந்துகள், வான் குச்சிகள், 7 மோட்டார் சைக்கிள்கள், கூடாரங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

தாகம் தீர்க்க வந்த விலங்குகளை வேட்டையாடிய 13 பேர் கைது!! | Hunting Animals Vilpaththuva

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 35 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் வனாத்தவில்லுவ, புத்தளம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்தச் சோதனையின் போது மேலும் 8 சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments