சீனாவிடமிருந்து இலங்கைக்கு 11 இராணுவ வாகனங்கள்…
சீன தேசிய பாதுகாப்பு அமைச்சு 6.2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான 11 இராணுவ வாகனங்களை இலங்கை இராணுவத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் விசேட கடமைகளுக்கு ஈடுபடுத்துவதற்காக கையளித்துள்ளது.
பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், சீன தேசிய பாதுகாப்பு அமைச்சின் அவசர கட்டளை மற்றும் தொடர்பாடல் அமைப்பு இந்த வாகனங்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து நேற்று பெற்றுக்கொண்டுள்ளார்.
அதி நவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் இராணுவ நோக்கங்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் மேலதிக செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் உதவிப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments