பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்வதில் புதிய மாற்றம்!!
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போதுஅந்த விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 06 மாதங்களுக்குப் பிறகு, அந்த ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் செல்லாது என்று கூறுகின்றனர்.
வழங்கப்பட்ட எந்தவொரு சான்றிதழின் பிரதி இருந்தால், புதிய நகலைப் பெறத் தேவையில்லை என்று திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.
எனினும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே புதிய நகலை சமர்ப்பிக்க வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இது தொடர்பில், பதிவாளர் நாயகம் திணைக்களம், கல்வி, வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு பதிவு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments