Vettri

Breaking News

(SLTB) நிராகரிக்கப்பட்ட 175 பேருந்துகள் பழுது பார்க்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்!!




சுமார் 175 எண்ணிக்கையான பேருந்துகள் பாவனைக்கு உகந்ததில்லை என்று இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) நிராகரிக்கப்பட்ட நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை பழுது பார்க்கப்பட்டு திருத்தப்பட்ட பின்னர் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 175 பேரூந்துகள் பழுது பார்க்கப்படுதல் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ தகவல்களைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் விளைவால் வாகன உதிரிப் பாகங்கள் கிடைக்காமையால் குறித்த பேருந்துகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்தன. அவை தொடர்பான ஆவணங்கள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் அதிபரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 400 பேருந்துகளை திருத்த தீர்மானம் இந்த திருத்த நடவடிக்கைகளுக்கு டிப்போ மட்டத்தில் திட்டமொன்றினை ஆரம்பித்து பொது திறைசேரி ஒதுக்கீட்டின் மூலம் நிதி வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சேவையில் ஈடுபடாத 852 பேருந்துகளில் 400 பேருந்துகளை திருத்தப்படுவதற்கு அரசினால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் முதல் பகுதியாக, 175 பேருந்துகள் பழுது பார்க்கப்பட்டன சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் இந்த திருத்தப்பணிகள் நிகழ்ந்துள்ளன. தொழிநுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்பு இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிநுட்பப் பிரிவைச் சேர்ந்த பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன் இந்தத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த 175 பேருந்துகளில் 15 பேருந்துகள் "சிசு சீரிய" திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கான போக்குவரத்திற்காக வழங்கப்படும் என்றும் மீதமுள்ள பேருந்துகள் பயணிகள் போக்குவரத்துக்காக அந்தந்த டிப்போக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

No comments