Vettri

Breaking News

எரிபொருள் QR குறியீடு காரணமாக அரசுக்கு விளைந்த நன்மை !!




தேசிய எரிபொருள் அனுமதி அல்லது QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 வீதத்தால் குறைக்கப்பட்டதாகவும் இதனால் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு டொலர் நெருக்கடியில் இருந்தபோது, QR குறியீட்டை அறிமுகப்படுத்தியதன் பயனாக, மற்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு டொலரைப் பயன்படுத்த முடிந்தது என்றும், அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் 65 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கூறுகிறது

No comments