உலகில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை
அமெரிக்க வானிலை ஆய்வாளர்களால் எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவீடுகளின்படி, திங்கட்கிழமை (03) உலகின் அதிகபட்ச வெப்பமான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது முதல் முறையாக சராசரியாக 17'C ஐ தாண்டியுள்ளது.
ஜூலை 3 அன்று அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்துடன் (NOAA) இணைக்கப்பட்ட ஒரு அமைப்பால் பூமியின் மேற்பரப்பில் சராசரி தினசரி காற்று வெப்பநிலை 17.01C என பதிவுசெய்யப்பட்டது.
சாதனை முறியடிப்பு
இது கடந்த ஆண்டு ஜூலை 24 அன்று அளக்கப்பட்ட முந்தைய தினசரி சாதனையை (16.92C) முறியடித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 1979 தொடக்கம் 2000 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் எந்த ஒரு நாளிலும் 12 C - 17 C க்கும் குறைவாக இருந்த உலகின் சராசரி வெப்பநிலை, இவ்வாண்டு ஜூலை தொடக்கத்தில் 16.2 C யை எட்டியது.
மற்ற அளவீடுகளால் இந்தப் பதிவு இன்னும் உறுதிப்படுத்தபடாத போதும் வடக்கு அரைக்கோளத்தில் கோடைகாலம் தொடங்கும் போது அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டது.
கடந்த மாதம் கூட, ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை கண்காணிப்பு பிரிவு ஜூன் மாத தொடக்கத்தில் இதுவரை பதிவு செய்யாத சராசரி உலக வெப்பநிலை வெப்பமாக இருந்தது என தெரிவித்திருந்தது.
இதுதவிரவும், பசிபிக் பெருங்கடலில் எல் நினோ வானிலை நிகழ்வின் தொடக்கத்துடன் அடுத்த ஆண்டு வரலாற்று சராசரியை விட வெப்பநிலை இன்னும் உயரக்கூடும், அதுவும் இது கடந்த திங்களன்றாக (ஜூலை - 3) இருக்கும் என்று உலக வானிலை அமைப்பு உறுதிப்படுத்தி இருந்தது.
தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும்
குறித்த எதிர்வுகூறலின் படி, உலகில் அதிக வெப்பமான நாளாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமாத்திரமல்லாமல் சராசரி புவி வெப்பநிலை பொதுவாக ஜூலை இறுதி அல்லது ஓகஸ்ட் தொடக்கம் வரை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த வெப்பநிலை அதிகரிப்பிற்கு மனித செயற்பாடுகளே காரணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக எரிபொருட்களை எரிப்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தச் செயற்பட்டு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 பில்லியன் தொன் (tons) கிரகத்தை வெப்பமாக்கும் காபனீரொட்சைட் வாயுவை (CO2) வளிமண்டலத்திற்கு தொடர்ந்து வெளியிடுகிறது.
இதுவே தொடர்ச்சியான புவி வெப்பநிலை அதிகரிப்பிற்கு வழி வகுக்கிறது என தெரியவந்துள்ளது. இது இவ்வாறு இந்த வெப்பநிலை அதிகரிப்பு எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
No comments