Vettri

Breaking News

யாழில் துணிவுடன் கசிப்பு உற்பத்தியை முற்றுகையிட்ட பெண் கிராம சேவையாளர்!!




யாழ் மருதங்கேணி, வத்திராயன் பெண் கிராமசேவையாளர் கசிப்பு காய்ச்சும் இடத்திற்கு காவல்துறையினருடன் நேரடியாக சென்று கசிப்பு உற்பத்தியை தடை செய்துள்ளமையால் அப்பகுதி மக்கள் குறித்த கிராம சேவையாளரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். கிராம சேவையாளர்கள் என்றாலே கள்ள மண்ணுக்கு ஆதரவளித்தல், பக்கச்சார்புடன் செயற்படுதல், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்க தயங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் என்று மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் தான் இருந்து வந்தது. சட்டவிரோத செயல்களை தடுத்தல் யாழில் துணிவுடன் கசிப்பு உற்பத்தியை முற்றுகையிட்ட பெண் கிராம சேவையாளர்! | Woman Grama Niladhari Stop Liquor At Jaffna ஆனால் வத்திராயன் கிராம உத்தியோகத்தர் பொதுமக்களுக்கும் தன் சக கிராம அலுவலர்களுக்கும் நேர்மையாகவும் தற்துணிவாகவும் செயலாற்ற வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார். அவரது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிராமப்பகுதியில் இத்தகைய சட்டவிரோத செயல்கள் நிகழ்வதைத் தடுக்க வேண்டும் என்று, வத்திராயன் கிராம அலுவலர் காவல்துறையினருடன் சென்று கசிப்பு நிலையத்தை முற்றுகையிட்டதன் ஊடாக அதனை நிரூபித்துள்ளார். ஏனைய கிராம அலுவலர்களும் வத்திராயன் கிராம சேவையாளர் போன்று தற்துணிவுடன் பக்கச்சார்பின்றி சேவை செய்ய வேண்டும், என்பதற்கு இந்த கிராம சேவையாளர் முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments