Vettri

Breaking News

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்காக பாடசாலைகளில் தொழிற் பயிற்சி கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.







ஜேர்மன் தொழிநுட்ப பயிற்சி நிறுவனத்தில் தொழிற்பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதனைக் கூறினார்.


உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்கும் முன் மூன்று மாத காலப்பகுதியை மாணவர்கள் இதன் மூலம் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.


ஒரு மாணவர் உயர் தரக் கல்வியை தொடர்வதற்கு தீர்மானிக்கா விட்டாலும், O/L பரீட்சைக்குப் பின்னர் ஒரு தொழிற் பயிற்சி கல்வியை நிறைவு செய்தவன் மூலம் அது எதிர்கால வாய்ப்புகள் பற்றி சிறந்த புரிதலை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

No comments