Vettri

Breaking News

கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்து.




ஈழத் தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு அருகாமையில் நேற்று (23/07/2023) மாலை இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது கறுப்பு யூலை நினைவேந்தல் பொதுச் சுடரினை மாவீரரின் தந்தையொருவர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து ஏனையவர்களும் சுடரேற்றி அஞ்சலி செய்தனர். இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments