Vettri

Breaking News

யாழில் உற்சவங்களுக்கு யானையை அழைத்து வர தடை!




யாழ்.மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் ஏனைய ஊர்வலங்களுக்கு யானைகளை கொண்டு வருவதை கட்டுப்படுத்துமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவானர் சிவபாலசுந்தரன் அறிவித்தல் விடுத்துள்ளார். யானை பாகனின் கண்காணிப்பு இல்லாமல் பொதுமக்கள் நடமாடும் இடங்களுக்கு யானைகளை கொண்டு செல்வது விலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் பொதுமக்களுக்கும் விபத்துக்களை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.நகரில் ஏதேனும் தேவைக்கு யானைகளை கொண்டு வருவது அவசியமானால் அது தொடர்பில் வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளரிடம் முதலில் தெரிவித்து அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவில் திருவிழாக்களுக்கு யானைகளை அழைத்து வருவது வழமையான ஒரு விடயமாக இருந்தாலும், அண்மைக்காலமாக தென்பகுதியில் இருந்து கோவில் திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு யானைகளை வரவழைக்க நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது பொதுமக்களுக்கும் , விலங்குகளுக்கும் பாரிய பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments