.கோரவிபத்தில் பலியான இளம் தம்பதி - வைத்தியசாலைக்கு சென்றவேளை துயரம்
கொழும்பில் நேற்றிரவு இடம்பெற்ற கோரவிபத்தில் இளம் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கடுவெல பிரதேசத்தில் நேற்றிரவு எட்டு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கோரவிபத்தில் இளம் தம்பதிகளான 27 வயதான கணவரும் 25 வயதான மனைவியும் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர்.
தம்பதிகளான இருவரும் வைத்தியசாலைக்கு செல்வதற்காக முச்சக்கரவண்டியில் சென்றவேளை பின்னால் வந்த பாரவூர்தி ஒன்று முச்சக்கரவண்டி மீது மோதியதில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி(வயது 34)கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரவூர்தியின் சாரதியை கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments