இலங்கை வந்த சுற்றுலாப்பயணிகளுக்கு நடந்த துயரம்!
கொஸ்லந்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹிவல்கந்துர பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (26) காலை வெல்லவாய – கொஸ்லந்த பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தின் போது, வானில் சாரதி மற்றும் நான்கு பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வான் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்
No comments