ரயில் சாரதிகள் சுகயீன விடுமுறை போராட்டம்!!
ரயில் சாரதிகள் நேற்று பிற்பகல் முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், இன்றைய ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, இன்று காலை சேவையில், ஈடுபடவிருந்த 11 ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக, நேற்று நள்ளிரவு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவிருந்த பல ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
இதனால், பயணிகள் பாரிய அசௌகரியத்திற்கு முகங்கொடுத்திருந்தனர். எவ்வாறாயினும், கலந்துரையாடுவதற்காக ரயில்கள் சாரதி சங்கத்திற்கு ரயில்வே திணைக்கள முகாமையாளர் அழைப்பு விடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சந்தன லியன் தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பானது, இன்று இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
No comments