சினோபெக்கின் முதல் எரிபொருள் கப்பல் ஒகஸ்ட்டில் – அமைச்சர்
இலங்கை எரிபொருள் சந்தையில் நுழைவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சீனாவின் சினோபெக்கின் முதலாவது எரிபொருள் ஏற்றுமதி அடுத்த மாத முற்பகுதியில் நாட்டிற்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
No comments