Vettri

Breaking News

ஆஷஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா தக்கவைத்துக்கொண்டது!!




மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக தடைப்பட்டு வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் ஆஷஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா தக்கவைத்துக்கொண்டது. ஐந்து போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியாவும் 3ஆவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றிருந்தன. இதற்கு அமைய தொடரில் 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு 2001க்குப் பின்னர் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ஒன்றில் முதல் தடவையாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஓவல் விளையாட்டரங்கில் எதிர்வரும் வியாழக்கிழமை 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்தாலும்கூட இதற்கு முந்தைய தொடரில் ஆஷஸ் கிண்ணத்தை அவுஸ்திரேலியா வெற்றிபெற்றிருந்ததன் அடிப்படையில் ஆஷஸ் கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ளும். நான்காவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளன்று (சனிக்கிழமை 22) மழை காரணமாக 30 ஓவர்கள் மாத்திரம் விளையாடப்பட்ட நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மீதமிருக்க அவுஸ்திரேலியாவைவிட 61 ஓட்டங்களால் இங்கிலாந்து பின்னிலையில் இருந்தது. எனினும் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக மழை பெய்ததால் அன்றைய ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் பிற்பகல் 5.24 மணியளவில் நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது என உறுதிப்படுத்தப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அணித் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் 17 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து எதிர்கொண்ட முதலாவது வெற்றிதோல்வியற்ற முடிவு இதுவாகும். மற்றைய 16 போட்டிகளில் 12 வெற்றிகளை ஈட்டிய இங்கிலாந்து 4இல் தோல்வி அடைந்தது. எண்ணிக்கை சுருக்கம் அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 317 (மார்னுஸ் லபுஸ்சான் 51, மிச்செல் மார்ஷ் 51, ட்ரவிஸ் ஹெட் 48, ஸ்டீவன் ஸ்மித் 41, மிச்செல் ஸ்டார்க் 36, க்றிஸ் வோக்ஸ் 62 - 5 விக்., ஸ்டுவட் ப்றோட் 68 - 2 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: 592 (ஸ்க் க்ரோவ்லி 189, ஜொனி பெயார்ஸ்டோவ் 99 ஆ.இ., ஜோ ரூட் 84, ஹெரி ப்றூக் 61, மொயின் அலி 54, பென் ஸ்டோக்ஸ் 51, உதிரிகள் 35, ஜொஷ் ஹேஸ்ல்வூட் 126 - 5 விக்., கெமரன் க்றீன் 64 - 2 விக்., மிச்செல் ஸ்டார்க் 137 - 2 விக்.)அவுஸ்திரேலியா 2ஆவது இன்: 214 - 5 விக். (மார்னுஸ் லபுஸ்சான் 111, மிச்செல் மார்ஷ் 31 ஆ.இ., டேவிட் வோர்னர் 28, மார்க் வூட் 27 - 3 விக்.) ஆட்டநாயகன்: ஸக் க்ரோவ்லி

No comments