மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு, மூவர் காயம்
மாத்தறை அக்குரஸ்ஸ, அமலகொட பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று (22) காலை பலத்த காற்றினால் அமலகொட சந்தி பகுதியில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றிற்கு அருகில் உள்ள மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரம் வீழ்ந்ததால்
மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு, மூவர் காயம் |
இதன்போது, அருகில் இருந்த 05 பேர் வீழ்ந்த மரத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 65 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
No comments