யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி - கொலையென உறுதி!
யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மூதாட்டி நேற்று(26) காலையில் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
மூதாட்டி கொலை உறுதி
யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி - கொலையென உறுதி!
அதனையடுத்து சாவகச்சேரி நீதவான் சடலத்தை பார்வையிட்டதோடு உடல்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்புமாறும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தலை மற்றும் கைகளில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments