இந்தவருடத்தில் இலங்கையை விட்டு வெளியேறிய ஒரு இலட்சம் பேர்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இளைஞர்கள், தாய்மார் உள்ளிட்ட பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர். இவ்வாறாக வேலைவாய்ப்புக்காக செல்லும் பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக சிறி லங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த வருடத்தின் இறுதிக்கு முன்னதாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
No comments