திரிபோஷா இல்லாமல் குழந்தைகள் அவதி
06 மாதங்கள் முதல் 03 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்குவது அத்தியாவசியமானது என அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவிக்கின்றார்.
அந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ கொடுப்பதை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
06 மாதங்கள் முதல் 03 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷா கொடுக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறுபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments