அதிகவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் கைது....
தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை - மத்துகம வீதியில் வருகை தந்த சந்தேகநபர் தொடம்கொட நுழைவாயில் வழியாக மாத்தறை நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து வெலிபென்ன நோக்கி பயணிக்க முயன்றுள்ளார்.
சந்தேக நபரை பின்தொடர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு நெடுஞ்சாலையில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது சந்தேக நபர் அதிக மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் மத்துகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக தொடம்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
*‼️ பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து..... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...‼️*
No comments