நடாஷா எதிரிசூரியவுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது !
மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறப்படும் நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை வழங்கி கொழும்பு உயர்நீதிமன்றம் புதன்கிழமை (05) உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, அவரை ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று ( 5) உத்தரவிட்டிருந்த நிலையிலேயே உயர்நீதிமன்றம் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது
ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சியின்போது பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
No comments