Vettri

Breaking News

அங்கொட வைத்தியசாலையில் நோயாளி மர்மமரணம் - நிர்வாகம் கடும் மௌனம்....




நோயாளியொருவரின் மரணம் தொடர்பில் அங்கொட மனநோய் வைத்தியசாலை இறுக்கமான மௌனத்தை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அங்கொட மனநோய்வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்ட நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியசாலை நிர்வாகம் இதுகுறித்து மௌனம் காப்பதாகவும் சிலோன்டுடே தெரிவித்துள்ளது. மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28 வயது நபர் ஒருவர் ஜூலை20 ம்திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்,எனினும் இந்தவாரம் வைத்தியசாலை ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்ட அவர் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளார் என சிலோன்டுடே தெரிவித்துள்ளது. நோயாளியை கட்டுப்படுத்த முயன்றவேளை அவரை தாக்கியுள்ளனர். பிரேதப்பரிசோதனையின் தாக்குதலுக்;கு உள்ளான நபருக்கு பலகாயங்கள் ஏற்பட்டுள்ளமையும் அதனால் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது என சிலோன் டுடே தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியவேளை சுகாதார அமைச்சு கருத்துகூறுவதற்கு தடைவிதித்துள்ளதை சுட்டிக்காட்டி வைத்தியசாலை நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது என தெரிவித்துள்ள சிலோன்டுடே உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் -உண்மையை மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளனர் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments