Vettri

Breaking News

ஐ.சி.சியின் துடுப்பாட்ட தர வரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை வீராங்கனை..!




 நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்களை விளாசி இலங்கை மகளிர் அணியின் தொடர் வெற்றிக்கு உதவிய இலங்கை துடுப்பாட்ட அணித் தலைவி சாமரி அத்தபத்து துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் பெத் மூனியை பின்தள்ளி சாமரி அதபத்து துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சமரி அதபத்து 3 போட்டிகளில் 2 சதங்களை பெற்றிருந்தார்.

சாதனை

ஐ.சி.சியின் துடுப்பாட்ட தர வரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை வீராங்கனை..! | Sri Lankan Woman Cricketer 1St Place Icc Odi Rank

முதல் போட்டியில் 108 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற அவர், இரண்டாவது போட்டியில் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெறும் 80 பந்துகளில் 140 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

வரலாற்றில் முதன்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை மகளிர் அணி ஒருநாள் தொடரை வெற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், இலங்கை மகளிர் கிரிக்கெட்டில் தரவரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

சனத் ஜயசூரியவை தொடர்ந்து ஐ.சி.சியின் துடுப்பாட்ட தர வரிசையில் முதலிடம் பிடித்த இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையை பதிவுசெய்துள்ளார். 

No comments