Vettri

Breaking News

சில இராஜாங்க அமைச்சர்கள் அரசின் சன்மானத்துக்காக தன்மானத்தை இழந்து உள்ளார்கள் -ஜெயசிறில் தெரிவிப்பு!!




கருப்பு ஜூலை 40 வது நினைவு தின நிகழ்வானது இன்று(30) மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் துறை நீலாவனை சித்தி விநாயகர் தில்லையம்பல பிள்ளையார் ஆலய முன்றலில் இடம் பெற்றது மட்டக்களப்புபாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன்
,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்,மட்டக்களப்பு முன்னாள் மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் முன்னாள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோர் கலந்து கொண்டனர் இதன்போது உரையாற்றிய முன்னாள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார் தமிழர்களின் இன விடுதலைக்காகவும் நில விடுதலைக்காகவும் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றோம்அரசு வழங்குகின்ற ஒரு சில சன்மானத்துக்காக தன்மானத்தை விட்டு சில இராஜாங்க அமைச்சர்கள் நில வளத்தை விற்று விட்டு தற்போது நீர்வளத்தை விற்பதற்கு தயாராகிறார்கள் இதனைப் புரிந்து மட்டு அம்பாறை மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து தமிழரசுக்கட்சி எடுக்கின்ற செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார் அபிவிருத்தி எனும் போர்வையில் இளைஞர்களை ஏமாற்றுகின்றனர் எனவே இதனைப் புரிந்து செயற்பட வேண்டும் எமது இன மக்களின் கண்கள் புடுங்கப்பட்டும் ஆடைகள் கிழிக்கப்பட்டும் இளைஞர்கள் கொத்துக்கொத்தாக அளிக்கப்பட்ட வரலாறுகள் இனி இடம் பெறக்கூடாது எனவே எமது இளைஞர்கள் தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற எமது தமிழரசுகட்சியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என தெரிவித்தார்

No comments