பொருளின் விலையைக் காட்சிபடுத்தாத வர்த்தகர்களுக்கு அபராதம்!!
நுகர்வோர் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாத அனைத்து கடைகளுக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் (23ஆம் திகதி) தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மொத்த விற்பனை கடைகள், சில்லறை கடைகள், உணவகங்கள் மற்றும் அனைத்து நுகர்பொருள் விற்பனை செய்யும் இடங்களிலும் இந்த விலைக் காட்சிச் சட்டத்தை அமல்படுத்துவது கட்டாயமாகும் என்றும், விலையைக் காட்சிபடுத்தாத கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாமென அனைத்து நுகர்வோரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சட்டத்தை அமுல்படுத்தாத கடைக்காரர்களுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
No comments