Vettri

Breaking News

யாழில் மருத்துவரின் வீட்டில் நடந்த பயங்கரம்!!!




யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் மருத்துவர் ஒருவரின் வீடு புகுந்த இனம் தெரியாத நபர்கள் இன்று (29) வீட்டுத் தளபாடங்களை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். கந்தர்மடம், பழம் வீதியிலுள்ள குறித்த மருத்துவ தம்பதிகளின் வீட்டுக்குள் நுழைந்த கும்பலே இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளது. இரண்டாவது தடவை யாழில் மருத்துவரின் வீட்டில் நடந்த பயங்கரம்! | Jaffna Doctors Home Damaged By Unknown Persons இன்று (29) அதிகாலை ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீட்டில் இவ்வாறு அட்டூழியம் இடம்பெறுவது இரண்டாவது முறை எனவும், கடந்த சில வாரங்களிற்கு முன்னரும் இந்த வீட்டிற்குள் இவ்வாறு கும்பல் ஒன்று நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் குறித்த தம்பதியினர் குறிப்பிட்டனர். இதேவேளை காணி உரிமை தொடர்பான தகராறினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments