Vettri

Breaking News

மல்லாவியில் இளைஞர் சுட்டுக்கொலை: கைதானவர்களுக்கு விளக்கமறியல் !






முல்லைத்தீவு – மல்லாவி, பாலிநகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாலிநகரில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

மல்லாவி பொலிஸார் – குற்றப்புலனாய்வுத் துறையினர் இணைந்து இந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், நான்கு சந்தேகநபர்களை மல்லாவி பொலிஸார் நேற்று (11) கைது செய்திருந்தனர்.

அவர்களில் மூவர் நேற்றும், ஒருவர் இன்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் (10) மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் 23 வயதான இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைக்கு இடியன் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments