கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்......
கோதுமை மா இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படாவிட்டால், இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என,
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா 02 வார காலத்திற்கு மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்படுகின்றன.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் பல தடவைகள் கலந்துரையாடிய போதிலும்,
கோதுமை மா இறக்குமதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments