போதியளவு எரிபொருள் கையிருப்பில் உண்டு - கஞ்சன அறிவிப்பு
அரசாங்கத்திடம் இப்போது போதியளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக அரசாங்கத்திடம் எரிபொருள் இருப்பு குறைவாக காணப்பட்டது, இருந்த போதிலும், தற்போது மீண்டும் எரிபொருள் கையிருப்பில் இருக்கும் வகையில் ஒழுங்கு படுத்தப் பட்டிருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று (23) தெரிவித்துள்ளது.
இன்று (23) காலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தளத்தில் இட்ட பதிவின் அடிப்படையில் கையிருப்பில் இருக்கும் எரிபொருட்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (23) காலை 8.30 மணி நிலவரப்படி அரசாங்கத்திடம் 133,936 மெற்றிக் தொன் டீசலும் 6,192 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் உள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் 35,402 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் 5,367 மெற்றிக் தொன் ஒக்டேன் 95 பெற்றோல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை மாத்திரமல்லாது 30,173 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் அரசிடம் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
No comments