Vettri

Breaking News

பாதுகாப்புக் காரணங்களுக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்பிரின் மாத்திரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது




உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அஸ்பிரின் வகையின் பாவனையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த மருந்தின் பாதுகாப்பு தரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மருந்தின் தரம் பற்றிய உண்மைகளை முன்வைக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு வகை
அஸ்பிரின் மருந்தை திரும்பப் பெற முடிவெடுப்பதால் தட்டுப்பாடு ஏற்படாது என மேலதிக செயலாளர் உறுதியளித்துள்ளார்.

No comments