Vettri

Breaking News

யுவதியின் இறப்புக்கு காரணமான மருந்து பயன்பாட்டிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டது!




 


பேராதனை வைத்தியசாலையில் இளம் பெண்ணொருவர் ஊசி மருந்து காரணமாக உயிரிழந்ததையடுத்து, மரணத்திற்குக் காரணமாக குறிப்பிடப்படும் செஃப்ட்ரியாக்ஸோன் என்ற ஆன்டிபயோடிக் தற்காலிகமாக பாவனையிலிருந்து விலக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அகற்றப்பட்ட மருந்துகளின் இருப்பு இன்று 13 ஆம் திகதி ஆய்வக ஆராய்ச்சிக்காக அரசாங்கத்தின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு கூடத்திற்கு கொண்டு வரப்படும் என தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜித் குணசேகர தெரிவித்துள்ளார். ஆய்வகப் பரிசோதனைகளின் பின்னரே இந்தத் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து சரியான அறிக்கையை வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார் .

இதேவேளை, குறித்த தடுப்பூசிகள் வைத்தியசாலையின் மருந்தகத்தில் உரிய முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா, அவற்றைப் பயன்படுத்தும் போது முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்வதில் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments