திரிபோஷ உற்பத்தி வழமைக்குத் திரும்பியது
திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாதாந்தம் 13 இலட்சம் பக்கட்டுகள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 37 இலட்சம் திரிபோஷ பக்கட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மாதாந்தம் தேவைப்படும் திரிபோஷவை உற்பத்தி செய்வதற்காக 15 மெட்ரிக் தொன் கிலோகிராம் அளவிலான சோளம் அவசியமாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த தொகையை உள்நாட்டில் பெற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக அவை இந்தியாவில் இருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றன. கர்ப்பிணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் மற்றும் 3 வயதிற்கு அதிகமான குழந்தைகள் ஆகியோருக்கு மாத்திரமே தற்போது திரிபோஷ வழங்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments