லிஸ்ட்ல விட்டுப்போன மாணவி… நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கிய விஜய்… வெளியான புகைப்படம்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாகவும் இணையத்தில் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே சென்னை அருகே பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார்.
இதனிடையே கடந்த மாதம் விஜய் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் இரண்டு இடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பரிசுத்தொகை வழங்கினார்.
இந்நிலையில் நேற்று பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற விஜய் பத்தாம் வகுப்பில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் முதல் மாவட்டம் பிடித்த மாணவி உதயா அவர்களை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கினார். அது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
No comments