Vettri

Breaking News

வெளிநாடொன்றில் இலங்கையர் உட்பட ஐவருக்கு மரணதண்டனை!!!




இலங்கையர் ஒருவர் உட்பட ஐவருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட இலங்கையர் மற்றும் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 29 பேர் உயிரிழக்க காரணமான சந்கேநபர் உட்பட ஐவருக்கே இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்கொலைத்தாக்குதல் குற்றவாளிகள் வெளிநாடொன்றில் இலங்கையர் உட்பட ஐவருக்கு மரணதண்டனை | Kuwait Hangs Five Including One Sri Lankan ஒரு குவைத் நாட்டவர், எகிப்திய பிரஜை மற்றும் பிடுன் சிறுபான்மையைச் சேர்ந்த குவைத் அல்லாத குடிமகன் ஆகியோர் தற்கொலைத்தாக்குதல் சம்பவத்தின் குற்றவாளிகள் ஆவர். ஏழு பெண்கள் உட்பட 29 பேர் சாவேரே தேவாலயத்தைத் தகர்க்க உதவியதற்காக ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். 2016-ஆம் ஆண்டில், நான்கு பெண்கள் உட்பட 8 பேருக்கு இரண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பன்னிரண்டுக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். மரண தண்டனையில் மாற்றம் வெளிநாடொன்றில் இலங்கையர் உட்பட ஐவருக்கு மரணதண்டனை | Kuwait Hangs Five Including One Sri Lankan குற்றம் சாட்டப்பட்டவர்களில் குவைத்தில் டேஷ் தலைவர் என்று கூறப்படும் ஃபஹத் ஃபர்ராஜ் முஹரேப் அடங்குவார், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments