Vettri

Breaking News

அஸ்வினின் மாயாஜாலத்தில் விக்கெட்...! அசந்து போன மே.தீவுகள் அணித் தலைவர்




டிரினிடாட் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் பிராத்வெயிட் 75 ஓட்டங்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது. குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது. தொடக்க வீரர் தேஜ்நரைன் சந்தர்போல் 33 ஓட்டங்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.அதன் பின்னர் கிர்க் மெக்கென்சி 32 ஓட்டங்களில் முகேஷ் குமார் ஓவரில் இஷன் கிஷனிடம் பிடி கொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரும், அணியின் தலைவருமான கிரேஜ் பிராத்வெயிட் இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார். அணியின் ஓட்ட எண்ணிக்கை 157 ஆக உயர்ந்தபோது அஸ்வினின் மாயாஜால பந்தில் பிராத்வெயிட் ஆட்டமிழந்தார். அவர் ஒரு கணம் எப்படி ஆட்டமிழந்தேன் என்று குழம்பினார்.மொத்தம் 235 பந்துகளை எதிர்கொண்ட பிராத்வெயிட், ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் எடுத்தார்.

No comments