மீள ஆரம்பிக்கப்படவுள்ள அநுராதபுர - ஓமந்தை புகையிரத சேவை
அநுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் மற்றும் ஓமந்தை இடையிலான புகையிரத பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.
இந்நிலையில், இந்தியக் கடன் உதவியின் கீழ் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பழுது பார்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
No comments