அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான காத்திருந்தவர் மயங்கி விழுந்து மரணம்!
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்கான விண்ணப்பப்படிவம் பெற வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் எல்ல பிரதேச செயலாளர் பிரிவு அலுவலகத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
வரிசையில் காத்துக்கொண்டிருந்த குறித்த முதியவர் திடீரென மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான காத்திருந்தவர் மயங்கி விழுந்து மரணம்!
சம்பவத்தில் நமுனுகுல - தன்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த ராமையா குழந்தைவேலு (வயது 76) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments