Vettri

Breaking News

கொழும்பு ஒல்கட் மாவத்தை பொலிஸ் காவலரணை சேதப்படுத்தி, பொலிஸாரை மிரட்டியவர் கைது!




 




கொழும்பு  புறக்கோட்டை  ஒல்கட் மாவத்தையிலுள்ள பொலிஸ் காவலரணில் வைத்து  பொலிஸ் அதிகாரிகளை கத்தியைக் காட்டி மிரட்டி காவலரணைச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த  பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புறக்கோட்டை  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தினால்  திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட   30 வயதுடைய  கொழும்பைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒல்கெட் மாவத்தையில் செவ்வாய்க்கிழமை (4) மாலை குற்றத்தடுப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான முறையில் வீதியில் தங்கியிருந்த சந்தேக நபரை  புறக்கோட்டை  பொலிஸார் கைது செய்து  அழைத்துச் சென்றுள்ளனர். 

பின்னர் அவரை ஒல்கட் மாவத்தையில்  போதிக்கு அருகில் உள்ள பொலிஸ் காவலரணில்  தடுத்து வைத்து சோதனையிட்போதே சந்தேக நபர் பொலிஸாரை தாக்கி  காவலரணையும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முயற்சித்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments