பதுளையில் பல பகுதிகளில் காட்டுத்தீ!!
கடுமையான வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
அதேநேரம் அடையாளம் தெரியாத தரப்பினரால் கடந்த சில தினங்களில் காட்டுத்தீ வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் காட்டுத்தீ தொடர்பான தகவல்களை 117 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மஹியங்கனை தம்பான மாவரகல வனப்பகுதியில் தொடர்ந்தும் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் 70 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
No comments