Vettri

Breaking News

காரைதீவு சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 72 ஆவது குருபூஜையும் அன்னதானமும்




சித்தத்தில் உறைந்தவராம் சித்தானைக்குட்டி சித்தமெல்லாம் நிறைந்தவராம் சித்தானைக்குட்டி "என்று பக்தியோடு அழைக்கப்படும் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 72 ஆவது குருபூஜையும் அன்னதானமும் கோவிந்தசாமி எனும் இயற்பெயர் கொண்ட ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்கள் தமிழ்நாடு இராமநாதபுரத்தில் அவதாரித்தார், தனது சமஸ்தானத்தில் ஏற்பட்ட தொற்று நோயை தடுக்க முயன்ற நவநாத சித்தரையும் பெரியாணைக் குட்டி சுவாமிகளையும் சந்தித்த சுவாமியார் அவர்களோடு கொழும்பு வந்தடைந்தார் பின்பு தனது குருவான பெரியா ணைக் குட்டி சுவாமிகளின் ஆணைப்படி முன்னேஸ்வரம் சென்று அங்கு தங்கி பல சித்த சாதனைகளை புரிந்தார் தனது குரு சமாதியடைந்த தொடர்ந்து அவர் கதிர்காமம் சென்று திஸ்ஸமகாராமை என்ற இடத்தில் சிறிது காலம் தாங்கி விட்டு மட்டக்களப்பை வந்தடைந்தார் காரைதீவை வந்தடைந்த சுவாமிகள்பல அற்புதங்களையும் சித்தங்களையும் புரிந்து மக்களுக்கு அருள் ஆசி வழங்கி 1951 ஆம் ஆண்டு சமாதி அடைந்தார் .அவருடைய சமாதி கோயிலில் ஆண்டுதோறும் ஆடிச் சுவாதி நட்சத்திரத்தில் அன்னாரின் நினைவாக குருபூசை சிறப்பாக நடைபெற்று வருகிறது. வழமை போன்று இறைவனின் ஆசியுடன் 72 ஆவது குரு பூஜையும் அன்னதானமும் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.

No comments