Vettri

Breaking News

நிலுவைத் தொகையை செலுத்தா விட்டால் பிரதான 7 மருத்துவமனைகள் இருளில் மூழ்கும்!!




சுமார் பதினாறு கோடி ரூபா நிலுவையாகவுள்ள மின்சாரக் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஏழு வைத்தியசாலைகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இலங்கை மின்சார சபை ஜூலை 20ஆம் திகதி சுகாதார அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலை, சொய்சா மகளிர் வைத்தியசாலை, இலங்கை தேசிய பல் வைத்தியசாலை, ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, மாளிகாவத்தை விருத்கவேத தேசிய சிறுநீரக மாற்று சிகிச்சை நிலையம், தேசிய கண் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை என்பன அந்த ஏழு வைத்தியசாலைகளாகும். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாத்திரம் பன்னிரண்டு கோடி ரூபா மின்சாரக் கட்டணம் நிலுவையில் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எஞ்சிய ஆறு வைத்தியசாலைகளுக்கு கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபா மின்சாரக் கட்டணம் உள்ளதாகவும் இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. நோயாளிகளின் நலன் கருதி இலங்கை மின்சார சபை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பல தடவைகள் மின்சாரம் துண்டிக்கப்படாமல் தொடர்ச்சியான சேவையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் இனி தேசிய வைத்தியசாலைக்கு மின்சாரம் வழங்க முடியாது என சபை அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பல மின்பிறப்பாக்கிகள் தானாக இயங்குவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது

No comments